கிழக்கைவிட்டு கருணா தப்பியோடிதைத் தொடர்ந்து – ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் ‘கருணா குழு’ என்ற ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்ட ஆரம்பித்தது.
ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மக்களின் முக்கிய ஒரு தலைவனாக, அந்த மக்களின் ஒரு கதாநாயகனாக, அந்த மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்பணித்த கருணா என்ற மிகப் பெரிய வீரன், சிங்களம் என்ற தமிழ் மக்களின் பரம எதிரியின் கைக் கூலியாக மாறிய சோகம், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுதப்பட்டது.
சமாதான காலத்தில் கருணா என்ற புலிகளின் தளபதியைப் பார்ப்பதற்கு, கருணாவுடன் நின்று புகைப்படம் எடுப்பதற்கு, கருணாவுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கு தவித்த சிங்கள இராணுவ அதிகாரிகளின் ஏவலாளியாக மாறும் ஒரு சூழ்நிலை – அந்தக் ‘கருணா’ என்ற தமிழனுகே ஏற்பட்ட அவலம், வரலாற்றில் அவமானத்துடன் பதியப்பட்டது.
கிழக்கு மக்களினது கம்பீரத்தின் அடையாளமாக சுமார் இரண்டு தசாப்தமாக வலம் வந்த கருணா, அந்த மக்களுக்கு நீங்காத வடுவை ஏற்படுத்திவிட்டு, சிங்களத்தின் ‘செல்லப்பிள்ளையாக’ மாறியிருந்தார்.
எந்த மக்கள் அவரை உயிரும் மேலாக நேசித்தார்களோ, எந்தப் போராளிகள் கருணாவின் உயிரைக் காப்பாற்ற தங்களுடைய உயிர்களையே அர்பணித்திருந்தார்களோ- அந்த மக்களையும், போராளிகளையும் அழித்தொழிக்கும் சிங்கள தேசத்தின் நடவடிக்கைகளுக்கு தெரிந்துகொண்டே துணைபோக ஆரம்பித்தார் கருணா.
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -20) – நிராஜ் டேவிட்
0முன்னைய பாகங்கள்
பகிரல்