கருணா;
பல களமுனைகள் கண்ட தளபதி.
தமிழ்மக்களுக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு சாதனைத் தளபதி.
இந்திய இராணுவத்தினால் அனுக முடியாதபடி இரும்பு வேலி அடைத்து, நிமிர்ந்து நின்ற ஒரு வீரப் போராளி.
யுத்தத்தாங்கிகள், ஆட்லறிகள், ஆயிரக்கணக்கான படைவீரர்கள், விமானங்கள் என்று வன்னியை ஆக்கிரமிக்கவந்த ஜெயசிக்குறு படையினரை வெறும் நான்கே நாட்களுக்குள் ஓட ஓட விரட்டியதாகக் கூறப்பட்ட வீரத்தலைவன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 80 வீதமான நிலப்பரப்பையும், அம்பாறை மாவட்டத்தின் 30 வீதமான நிலப்பரப்பையும் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகள் அமைப்பின் ஒரு சிறப்புத் தளபதி.
கேணல் தரத்திலான பதிவியை வாழும் நாட்களிலேயே பெற்றுக்கொண்ட ஒரு முக்கிய தளபதி.
புலிகள் அமைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பதாக மார்தட்டிக்கொண்ட சிரேஷ்ட தளபதி.
இப்படிப்பட்ட எத்தனையோ சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இந்தக் கருணாவை – எப்படி புலிகளால் கிழக்கைவிட்டு புறமுதுகு காட்டி ஓட வைக்க முடிந்தது?