உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-14) – நிராஜ் டேவிட்

0

உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற ஒரு முக்கிய விடயம் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக, கடந்த யுத்த காலங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்iகைள் பற்றி தற்பொழுது ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கருணாவின் பிளவு இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் யுத்தம் பற்றித்தான் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கின்றோம்.


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் பிரிந்துவிட்டதாகக் கூறி, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கருணா தனியாட்சி நடாத்திய அந்த 41 நாட்கள் காலப்பகுதி பற்றி அனேகமாக ஈழத்தமிழர் அனைவருக்குமே ஞாபகம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.;.

அந்தக் காலப்பகுதிpயில் மட்டக்களப்பின் நிலை என்பது, தேசியத்தை நேசித்த தமிழர்களுக்கு மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது.
மட்டக்களப்பின் பெரும்பாண்மையான மக்கள் என்று கூறாவிட்டாலும், பெரும் தொகையிலான தமிழ் மக்கள் கருணாவின் பிரதேசவாதக் கருத்துக்களை உள்வாங்கி, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்று தேசியத்திற்கு எதிராக களமிறங்கியிருந்தார்கள்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் என்று ஒரு தொகையிலானோர் கருணாவின் பின்னால் அணி திரண்டிருந்தார்கள். அர்களில் பெரும்பாண்மையனோருக்கு அந்த நேரத்தில் கருணாவின் பின்னால் அணிதிரள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
கருணா, சிறிலங்கா இராணுவத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, தனது இருப்பையும், பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் ஓரளவு உத்தரவாதப்படுத்திக்கொண்டார்.
மோட்டார்கள், கனரக ஆயுதங்கள், அணிவகுத்த போராளிகள் பின்னணியில் தெரிய, பழச்சாறுடன் தொலைக்காட்சியில் தோன்றி, சாதாரணமாகச் உரை நிகழ்திக்கொண்டிருந்தார் கருணா. விடுதலைப் புலிகளின் பலமும் எனக்குத் தெரியும் அவர்களது பலவீனமும் எனக்குத் தெரியும் என்று புன்முறுவல் பூத்த முகத்துடன் தென் இலங்கை ஊடகங்களுக்குச் செவ்வி வழங்கிக்கொண்டிருந்தார் கருணா.

மட்டக்களப்பு மாவட்டத்தையும், திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கின்ற ஒரு எல்லையாக இருக்கும் வெருகல்; ஆற்றின் தெற்குப் பகுதியில் கருணாவிற்கு ஆதரவான போராளிகள் லெப்டினட் கேணல் ரெஜி தலைமையில் நிலை கொண்டிருந்தார்கள்.

உண்மையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் அவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்த காலகட்டங்களுக்குள்; ஒன்று என்று இந்தச் சந்தர்ப்பத்தைக் குறிப்பிடலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிக் கையாளுவது?
சாதாரண எதிரித் தரப்பைக் கையாளுவதுபோன்று இதனைக் கையாளமுடியாது. சண்டை, அது இது என்று வந்தால் இழப்புக்கள் யாருக்கு ஏற்பட்டாலும் அது ஈழத் தமிழருக்கான இழப்பாகத்தான் இருக்கும். அதற்கு மேலாக இந்த விடயத்தைச் சரியாகக் கையாளாவிட்டால், அது ஒரு வாலாற்றுக் கறையாகவே மாறிவிடும். எனவே வழமையான பாணியில் கையாளாமல் மிக மிக நுணுக்கமாக இந்தச் சச்சரவைத் தீர்த்துவைக்கவேண்டிய சற்றுச் சங்கடமான ஒரு நிர்ப்பந்தம் புலிகளுக்கு ஏற்பட்டது.

எனவே கருணாவிடம் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மீட்பதற்காக உளவியல் நடவடிக்கையை முழு அளவில் உபயோக்க விடுதலைப் புலிகளின் தலைமை தீர்மாணித்தது.


அந்த நேரத்தில் கருணாவிற்கு உண்மையிலேயே பெரிய பலம் இருந்தது. கருணா வசம் பெரும் தொகையிலான ஆயுதங்கள் இருந்தன. பல களம் கண்ட தளபதிகள் இருந்தார்கள். பின்னாட்களில் கருணாவுடன் இருந்து பிரிந்து புலிகள் அமைப்புடன் சேர்ந்த புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கரிகாலன், தளபதி ரமேஷ் உட்பட பல தளபதிகள்; அந்த நேரத்தில் கருhவுடன்தான் இருந்தார்கள். (கருணாவின் பிரிவு நிலைப்பாட்டை முதன் முதலில் செய்தி ஊடகங்களுக்கு அறிவித்தது கரிகாலனே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.)
உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைமைக்கு பெரிய சவாலான விடயங்களாகவே இவைகள் இருந்தன.
கருணாவுடன் அனேக காலத்தை கழித்த தளபதிகள். கருணாவினால் உருவாக்கப்பட்டு, கருணாவின் கட்டளைக்குக் கீழ்படிந்து பழக்கப்பட்ட போராளிகள். கருணாவிற்கு அநீதி இளைக்கப்பட்டதாக நினைத்து அதிருப்தி அடைந்திருந்த தமிழ் தேசியவாதிகள்… இவர்களில் இருந்து கருணாவை எப்படி அன்னியப்படுத்துவது?

ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு அதனைச் சாதித்தது. அதுவும் வெகு சீக்கிரத்தில் மிகவும் வெற்றிகரமாகச் சாதித்ததது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்த கருணா என்கின்ற முரளிதரன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடமிருந்து மட்டக்களப்பை மீட்கும் நோக்குடன் விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்த விஷேட இராணுவ நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் தனது 2004ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுப் பரிசாக இந்த மாபெரும் வெற்றியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருந்தார் என்று தமிழ் தேசிய ஆதரவாளர் அகமகிழ்ந்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று-வடக்கு பிரதேசம் என்று கூறப்படுகின்ற வாகரைப் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த சுமார் 4000 கருணா அணியினரை அந்த இடங்களில் இருந்து விரட்டியடித்து, அந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதில் விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் பாரிய வெற்றியை அடைந்திருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் முழுவதையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்; கொண்டு வந்து, கருணாவின் பிடியில் அகப்பட்டு 41 நாட்களாகப் பரிதவித்து வந்த மட்டக்களப்பு மக்கள், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு விடுதலைப் புலிகள் களம் அமைத்துக் கொடுத்ததுள்ளார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது மிகவும் இலவான ஒரு வெற்றியாகத் தோன்றினாலும், உண்மையிலேயே பலத்த திட்டமிடல்களுக்கும், உயரிய தியாகங்களுக்கும், வேகமான நகர்வுகளுக்கும், அனைத்திற்கம் மேலாக விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்றே இதனைக் கூறவேண்டும்.
இந்த பாரிய வெற்றிக்குப் பின்னால் இருந்த கரங்கள், இந்த வெற்றியை அடைவதற்கு சிந்தப்பட்ட இரத்தம், இந்த வெற்றிக்குப் பின்னாலிருந்த கடின உழைப்பு – என்பன பற்றி காலம் பல கடந்துவிட்ட நிலையிலும் நாம் மீட்டுப்பார்க்கவேண்டியது அவசியமாக உள்ளது.

கருணா அணியினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் இடையில் போட்டியான ஒரு நிலை உருவாகி இருந்த போது, இது ஷவேகத்திற்கும், விவேகத்திற்கும் இடையில் நடைபெறுகின்ற ஒரு போட்டி| என்றே பல ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தார்கள்;.
உண்மையிலேயே விடுதலைப் புலிகள் தரப்பில் காணப்பட்ட அந்த ஷவிவேகம்|, வேகமாக இருந்ததாகத் தம்மை வெளிக்காண்பித்துக்கொண்டிருந்த கருணா அணியினரை எப்படி தோற்கடித்துள்ளது என்று முதலில் பார்த்துவிட்டு, பின்னர் புலிகள் அமைப்பு இந்த நடவடிக்கையின் பொழுது பாவித்த உளவியல் நடவடிக்கை பற்றி நாம் பார்ப்போம்.

03.03.2004ம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் தனியாகப் பிரிந்து செல்வதாக கருணா பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, ‘வெருகல்| என்று கூறப்படுகின்ற, வாகரைப் பிரதேசத்தின் வடக்கு எல்லை மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
கருணா புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கருணாவிற்கு விசுவாசமாக இருந்த போராளிகளுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் செயற்படுகின்ற போராளிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்த முறுகல் நிலையின் வெளிப்பாட்டை, இந்த ஷவெருகல்| ஆற்றின் கரைகளிலேயே பகிரங்கமாகக் காணக் கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக சுமார் 68 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த வெருகல் ஆறே, மட்டக்களப்பு மாவட்டத்தையும், திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கின்ற ஒரு எல்லையாக இருக்கின்றது. பாலம் எதுவும் இன்றி, வெறும் வள்ளத்தினால் மட்டுமே கடக்கக்கூடியதாக இருக்கின்ற இந்த வெருகல் ஆற்றின் இரண்டு மருங்கிலும், விடுதலைப் புலிகளின் இரண்டு வௌ;வேறு மனநிலையுடன் கூடிய அணியினர் நிலைகொண்டிருந்தார்கள். கருணாவிற்கு ஆதரவான போராளிகள் லெப்டினட் கேணல் ரெஜி (கருணாவின் மூத்த சகோதரன்) தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ள்ஸ் அன்டனி படையணியைச் சேர்ந்த போராளிகள் வெருகல் ஆற்றிற்கு வடக்காக திருகோணமலை மாவட்டத்திலும் நிலை கொண்டிருந்தார்கள்.


வெருகல் ஆற்றைக் கடந்து சார்ள்ஸ் அன்டனி படையினர் எந்த நேரத்திலும் முன்னேற்றத்தை ஆரம்பித்துவிடலாம் என்கின்ற எச்சரிக்கையில், கருணா அணியைச் சேர்ந்த நிறையப் போராளிகள் வெருகல் ஆற்றிற்கு தெற்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். சுமார் ஆறாயிரம் போராளிகள் வரையிலாவது வெருகல் கரையில் கருணா தரப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
வெருகல் ஆற்றைக் கடந்தே படையினரின் முன்னேற்றம் இருக்கும் என்பதே கருணா அணித் தளபதிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. புலிகள் வெருகல் ஆற்றைக் கடந்து வரும்போது அவர்களை இல்லாது ஒழித்துவிடும் அழித்தொழிப்புத் திட்டமே கருணா அணியினருக்கு இருந்தது. அதற்காக அந்த ஆற்றின் தெற்குப் பகுதிகளில் 120 மி.மீ. மோட்டார்களையும், கனரக ஆயுதங்களையும் நிறுத்தி தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.
கருணா வசமிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஜோன்சன் மோட்டார் படையணி எந்தவிதச் சவாலையைம் எதிர்நோக்கி பால்சேனை என்றும் இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று வெருகல் பிரதேசத்தை அண்டிய கட்டுமுறிவு காடுகளுக்குள்ளும் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் நிலையில் கருணா அணியின் மற்றொரு மோட்டார் படைப்பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
புலிகளின் அணிகள் தாக்குதல்களை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு எதிராக பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, புலிகளுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்துவதே கருணாவின் திட்டமாக இருந்தது. களமுனைத் தளபதிகளுக்கும் கருணா அப்படியே உத்தரவுகளையும் வழங்கியிருந்தார்.
ஆனால் கருணா அணியினர் எதிர்பார்த்தது போன்று புலிகளின் நகர்வுகள் அமைந்திருக்கவில்லை. கருணா அணியினர் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் புலிகளின் நகர்வுகள் இருந்தன.
9ம் திகதி அதிகாலை 2 மணியளவில் சண்டைகள் ஆரம்பமாகின. சுமார் மூன்று மணிநேரத்திலேயே பிரதான சண்டை நிறைவடைந்து விட்டது. அந்த அளவிற்கு விடுதலைப் புலிகளின் அணிகள் களமுனையில் வேகமாகச் செயற்பட்டன. தந்திரோபாய நகர்வுகளைத் திட்டமிட்டிருந்தன. விடுதலைப் புலிகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் அந்த வெற்றியை மிக இலகுவாக அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தது.

அன்றைய தினம் நடைபெற்ற தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணி களமுனைத்தளபதி ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்:
“அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்த தேசியத் தலைவர் எங்களுக்கு ஒரு விடயத்தை தொளிவாக வலியுறுத்தி இருந்தார். எதிர்த்தரப்பில் போராளிகள் இழப்பு இருக்கக்கூடாது என்பதே அவரது பிரதான கட்டளையாக இருந்தது. அடுத்ததாக ஷஷகருணா தரப்பில் இருந்த போராளிகளை மீட்பதுதான் உங்களுடைய நோக்கம்; அதுவும் அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராமல் அவர்களை உயிருடன் மீட்பதுதான் உங்களது பிரதான நோக்கம். அந்த அடிப்படையில்தான் நீங்கள் செயற்படவேண்டும்|| என்று தலைவர் எங்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அத்தோடு எங்களிடம் வந்து சேரும் போராளிகளை அல்லது எங்களால் கைப்பற்றப்படும் போராளிகளை, ‘சரணடைந்தவர்கள் என்றோ அல்லது எங்களால் கைப்பற்றப்பட்டவர்கள் என்றோ| எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் கூறக் கூடாது என்பதுடன், அவர்களை ‘மீட்கப்பட்ட| போராளிகள் என்றே நாம் அழைக்கவேண்டும் என்பதுடன், அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்தவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். முஸ்லைத்தீவு மற்றும் ஜெயசிக்குறு உட்பட பல சமர்களில் அழித்தொழிப்பு நடவடிக்கை மூலமே பாரிய வெற்றியை ஈட்டியிருந்த எங்களுக்கும் இப்படி எதிர்தரப்பிற்கு இழப்புக்களை ஏற்படுத்தாமல் செயற்படுவது என்பது மிகவும் கஷ்டமாகவே தென்பட்டது.


ஆனால் அதற்கும் தலைவர் நல்லதொரு திட்டத்தை வகுத்திருந்தார்.
வாகரைப் பிரதேசத்தை மீட்பதற்கு ‘கிடுக்கிப் பிடி| தாக்குதல் முறையை தலைவர் வகுத்து, போர்முனைத் தளபதிகளிடம் ஒப்படைத்திருந்தார். அதாவது ‘நட்டுவக்காலி| என்ற பிரானி தாக்குதலை மேற்கொள்ளும் முறையிலேயே வாகரைப்பிரதேச சண்டை திட்டமிடப்பட்டிருந்தது. நட்டுவாக்காலி எற்ற அந்தப் பிரானி தனது இரண்டு இடுக்குகளால் எதிரியைப் பிடித்துவிட்டு, அதேவேளை விஷமுள்ள தனது வாலால் பிரதான தாக்குதலை மேற்கொள்ளும். இந்த அடிப்படையிலேயே எங்களது வாகரைப் பிரதேசத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது.
கருணா அணியினர் வெருகல் ஆற்றைக் குறிவைத்து காத்திருக்க, கடல் மூலமாகவும், வாவி மூலமாகவும் நகர்ந்த ஜெயந்தன் விஷேட படைப்பிரிவுப் போராளிகள் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் நான்கு முனைகளில் ஊடறுத்து ஏற்கனவே நிலையெடுத்திருந்தோம். பிரதான தாக்குதல் வெருகல் துறை வழியாகவே திட்டமிடப்பட்டிருந்தது.
சண்டைகள் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்திலேயே கருணா அணியினர் பல துண்டுகளாக பிரிக்கப்பட்டுவிட்டார்கள். பிரிக்கப்பட்ட கருணா அணிகளால் மற்ற அணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை. ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருந்த எமது விஷேட படையணியினர் பால்சேனையில் இருந்த மோட்டார் நிலைகள் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்த 120 மி.மீ. மோட்டார்களையும், ஆயிரத்திற்கும் அதிகமான எறிகணைகளையும் கைப்பற்றியிருந்தார்கள். இதனால் எமது பிரதான அணிகள் வெருகல் வழியாக முன்னேறியபோது எதிர்ப்பதற்கு அங்கு எவருமே இருக்கவில்லை.
இதேவேளை, இந்த தாக்குதலை நடாத்திய எங்களின் அணிகள் ஏராளமான ‘மெகா போன்களை| (Mega Phones) எங்களுடன் கொண்டு வந்திருந்தோம். அவை மூலமாக கருணா தரப்பில் இருந்த போராளிகளை எங்களுடன் வந்து இணையும்படி கூறிக்கொண்டிருந்தோம். இதற்காகவென்றே களமிறக்கப்பட்ட அணிகள் இந்தப் பணியை மிகவும் வெற்றிகரமாக செய்துகொண்டிருந்தார்கள்.

அதேNளை, இந்தத் தாக்குதலை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டச் சிறப்புத் தளபதி ரமேஷ் அவர்களும், அதிசக்திவாய்ந்த தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் கருணா தரப்பில் களத்தில் இருந்த பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு, ‘தேசியத் தலைவரின் அணி அங்கு வந்திருக்கின்றது’ என்றும், அதனுடன் இணைந்து தலைவருக்கு உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவற்றைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போராளிகள் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். மறுநாள் பொழுது விடிந்தபோது வெருகல் ஆறு முதல் கதிரவெளி, கட்டுமுறிவு வரையிலான பிரதேசம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. வாகரை, பணிச்சங்கேணி பிரதேசங்கள் கூட எமது ஊடறுப்புத்தாக்குதல் அணியினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது. மறுநாள் நன்பகல் அளவில் கட்டுமுறிவுக் காட்டின் நடுவில் கருணா குழுவினால் இரகசியமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜோன்சன் மோட்டார் படையணியினர், 120 மி.மீ. கனரக மோட்டார் மற்றும் 82 மி.மீ. மோட்டார்கள் உட்பட பெருமளவு எறிகணைகளுடன் எங்கள் வசம் வந்து இணைந்திருந்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இரகசியமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த மோட்டார் அணியினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த ஒரு எறிகணைத் தாக்குதலைக் கூட நடாத்தவில்லை. வெள்ளிக்கிழமை மட்டும் எங்களால் கூமார் 401 போராளிகளை மீட்கமுடிந்தது. விடுதலைப் புலிகள் தரப்பில் நான்கு போராளிகள் வீரச்சாவு அடைந்திருந்தார்கள்|| இவ்வாறு அந்தக் களமுனைத் தளபதி புலிகளின் அந்த தாக்குதல் நடவடிக்கை வெற்றி பற்றிக் குறிப்பிட்டார்.
2004ம் ஆண்டு ஏப்பரல் 9ம் திகதி அதிகாலை புலிகள் தரப்பில் இருந்து தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தில் அப்பிரதேசத்தில் கருணா அணியினருக்கு nபுhறுப்பாக இருந்த தளபதி ரெஜி (கருணாவின் சகோதரன்) தப்பி ஓட்டமெடுத்திருந்தார். இது இரண்டாம் நிலையில் இருந்த பொறுப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. தொலைத் தொடர்புக் கருவிகளில் “அடியுங்கள்.. அடியுங்கள்..|| என்று தொடர்ந்து உத்தரவு வந்ததே தவிர எந்தப் பொறுப்பாளாகளும் களமுனைக்கு வரவில்லை. இதனால் கருணாவிற்கு விசுவாசமாக களமுனையில் நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒரு சிலர் கூட ஆயுதங்களைத் தூக்கி வீசிவிட்டு ஓட்டமெடுத்திருந்தார்கள்.

கருணா தரப்பில் இருந்த வினோதன் படையணி மற்றும் விசாலகன் படையணி என்பன லெப்டினட் கேணல் ராபர்ட் மற்றும் லெப்.கேணல் தாத்தா தலைமையில் நகர்வொன்றை மேற்கொண்டு, வாகரையில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகள் அணியினரைச் சுற்றிவழைத்துத் தாக்கவேண்டும் என்று கருணா உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு பாரிய ஆயுதங்களுடன் படையணிகளும் முன்னேறின. ஆனால் குறிப்பிட்ட இலக்கை நெருங்கியபோது கருணாவின் படையணியில் இணைந்திருந்த போராளிகளில் பலர் மாயமாகியிருந்தார்கள். காடுகளின் வழியாக அந்த படை நகர்வுகள் இருந்த போதே ஒவ்வொருவராக பல போராளிகள் தப்பியோடி இருந்தார்கள். கடைசியில் பெயருக்கு வானை நோக்கி ஓரிரு வேட்டுக்களைத் தீர்த்துவிட்டு, தளங்களுக்கு திரும்பிய கருணா அணியினர், புலிகள் மீது தாங்கள் பாரிய தாக்குதலை நடாத்தியதாக சிங்கள ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

கருணா அணியினர் வெருகல் ஆற்றுப் பிரதேசத்தில் பெற்ற தேல்வியின் பின்னால் புலிகள் மேற்கொண்ட ஒரு பெரிய உளவியல் நடடிக்கை இருக்கின்றது.
அந்த உளவியல் நடவடிக்கை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்