வன்முறையாக உருவெடுத்த தமிழ் மக்களின் கோபம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-38) – நிராஜ் டேவிட்

என்னதான் உணர்ச்சியின் வேகம் என்று கூறிக்கொண்டாலும், 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில், வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் மீது தமிழ் தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, மனவருந்தத்தக்க ஒரு நிகழ்வுதான் என்று இந்தச் சம்பவங்கள் பற்றிப் பதிவுகள் மேற்கொண்ட பல வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

சிங்களத்தின் வெறித்தனமான பிடிவாதத்தைத் தொடர்ந்து, 12 போராளிகள் அநியாயமாக தமது உயிர்களை இழக்க நேரிட்டதன் சோகம், இப்படியான ஒரு ரூபத்தில் வெளிப்பட்டதாக இந்தச் சம்பவங்களுக்கு காரணம் கற்பிக்கப்பட்டாலும், ஈழ வரலாற்றில் இது ஒரு கறைதான் என்று வாதிடும் பல தமிழ் அறிஞர்கள் இப்பொழுதும் எம்மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள்.
வன்முறைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அதுவும் குறிப்பாக சிங்களப் படையினராலும், சிங்களக் காடையர்களினாலும் தொடர்ந்து வன்முறைக்கு இலக்காகி வந்த தமிழ் சமுகம், ஆற்றமுடியாத தமது கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பம்தான் அதுளூ இப்படியான சம்பவங்கள்; தவிர்க்கமுடியாத ஒன்று – என்றும்; சில வரலாற்று ஆய்வாளர்கள், வடக்கு கிழக்கில் இடம் பெற்ற சிங்கள மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றார்கள்.
சரித்திரத்திலும் இதுபோன்ற உணச்சிகளின் வெளிப்பாடுகள் பல சந்தர்ப்பங்களிலும் நடைபெற்றிருக்கின்றன.
1984ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியத் தீவிரவாதிகளினால் கொலைசெய்யப்பட்ட போது, ஆத்திரம் அடைந்த இந்திய மக்கள் நாடுமுழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கியிருந்தார்கள். இரண்டு நாட்களில் இந்தியா முழுவது நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்தியாவின் இராணுவத்திலும் சரி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இந்தியாவின் விளையாட்டுத்துறையிலும் சரி, பாரிய பங்களிப்பைச் செய்துவந்த சீக்கிய இன மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டார்கள்.
டீல்லி, கலகத்தா, பம்பாய் போன்ற நகரங்களின் தெருக்களிலெல்லாம் அப்பாவிச் சீக்கியர்களின் பிணங்கள். சில நாட்களில் பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தியிடம், சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த ராஜீவ் காந்தி, ஷஷஒரு பெரிய மரம் சாயும் போது, சில அதிர்வுகள் அங்கு ஏற்படத்தான் செய்யும். அந்த அதிர்கள் காரணமாக அருகில் இருக்கும் சில புல்பூண்டுகள் அழிந்துவிடுவது தவிர்க்கமுடியாதது|| என்று பதில் அளித்திருந்தார்.

இதேபோன்று, 83ம் ஆண்டு ஜுலையில், புலிகளின் கன்னிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி 13 படைவீரர்கள் யாழ்பாணத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் அயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் கோபம் கொண்ட சிங்கள மக்கள் உணர்ச்சிவசப்பட்டு, இப்படியான காரியத்தைப் புரிந்துவிட்டதாக இந்தச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், தமிழ் நாட்டிலும், பெங்களுரிலும் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பொலிசாரினால் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள். கடைகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் பேசிய பலர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். (இத்தனைக்கும் ராஜீவ்காந்தியை புலிகள்தான் கொலைசெய்தார்கள் என்ற ஒரு சந்தேகம் மட்டுமே அப்பொழுது அங்கு நிலவியிருந்தது). பிரதமரை இழந்த சோகத்தில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றார்கள் என்று நியாயம் கூறப்பட்டது.
2001ம் ஆண்டு செப்டெம்பர் 11 இல், நியுயோர்க் மற்றும் வோஷிங்டனில் இஸ்லாமிய அல்கயிதா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதிபலிப்பு, முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கத் தெருக்களில் தாக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். போதாததற்கு அமெரிக்க காவல்துறையும் அமெரிக்காவில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்களை கைதுசெய்து துன்புறுத்தியது. தாடியுடன் தலைப்பாகை அணிந்து காணப்படும் சீக்கியர்களைக் கூட, முஸ்லிம்கள் என்று நினைத்து தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர், ஷஷமக்கள் தமக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பினால் கோபம் கொண்டிருக்கின்றார்கள்|| என்று கூறியிருந்தார்.
அண்மையில் மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரு உல்லாச ஹோட்டலில் இடம் பெற்ற குண்டுவெடிப்பொன்றில், அவுஸ்திரேலிய பிரஜைகள் சிலரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் பல முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றியும் ஊடகங்களில் அறிய முடிந்தது. இந்தச் சம்பவத்திற்கும், ‘இயல்பான கோபம்| காரணமாகக் கூறப்பட்டது.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், இழப்புகள் நோர்ந்து, தாங்க முடியாத சோகம் ஏற்படும் போது ‘இயல்பான கோபம்| வரலாம்ளூ ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் அப்படியான கோபம் எதுவும் வந்துவிடக் கூடாது.
சில தமிழ் புத்திஜீவிகளும் இப்படியான எண்ணப்பாடுடன் காணப்படுவதுதான் மிகுந்த மனவேதனைக்குரியது.

07.09.1996 இல் கிருஷாந்தி போன்றவர்கள் கொல்லப்பட்டதுடன், யாழ்குடாவில் 600இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படையினரால் கொலை செய்யப்பட்டால், அது புலிகள் முல்லைத் தீவு மீது தாக்குதல் நடாத்தியதால் படைவீரர்களுக்கு ஏற்பட்ட ஷமனப்பாதிப்பின் வெளிப்பாடு| என்று நியாயம் கற்பிக்கும் எமது புத்திஜீவிகளுக்குளூ
1992ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 9ம் திகதி மைலந்தனையில் 12 சிறுவர்கள் உட்பட 36 தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, – அது டென்சில் கொப்பேகடுவ கொலை செய்யப்பட்டதால் படையினருக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கத் தெரிந்த எமது வரலாற்று ஆசிரியர்களுக்கு, – ‘தமிழ் மக்களுக்கு தாங்கமுடியாத சோகம் ஏற்படும்போது, அவர்களுக்கும் கோபம் ஏற்படத்தான் செய்யும்| என்று புரிந்துகொள்ளும் பக்குவம் ஏன் இல்லாமல் போனது என்பதுதான் ஆச்சரியம்.
காலாகாலமாகவே சிங்களவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு, பலவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்த தமிழ் சமுகம், கிளர்ந்து எழுந்ததை ஒரு பொழுதும் பிழை என்று கூறிவிட முடியாது.
தமிழ் மக்கள் தமது உரிமையைக் கேட்டாலும் அடி, உண்ணாவிரதம் இருந்தாலும் அடிளூ சத்தியாக்கிரதம் இருந்தாலும் அடிளூ தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடாத்தினால் வெடிளூ சரி எதுவுமே வேண்டாம் என்று கொழும்புக்கு ஒதுங்கிச் சென்றவர்களுக்கு எதிராகவும் வன்முறை, கலவரம்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒருவாறு சமாதானம் திரும்பிவிட்டது என்று நினைத்து, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து, படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்புகின்ற வேளையில், இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிட்டதை நினைத்து தமிழ் சமுகம் சோகமும், ஆதங்கமும், கோபமும் கொள்ளத் தலைப்பட்டதில் என்னைப்பொறுத்தவரை தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மக்கள் மத்தியில் தாராளமாக நடமாடத் தொடங்கியிருந்தார்கள். அதுவரை சில போராளிகளின் வீர தீர சாகாசங்களை வாய்வழியாகவே கேள்விப்பட்டு வந்த பல தமிழ் மக்கள் அந்த காவிய நாயகர்களை நேரில் தரிசித்து மகிழ்ந்ததுடன், அவர்களுடன் புதிய நட்பை ஏற்படுத்தி களிகூர்ந்தும் வந்தார்கள். இப்படியான சந்தர்ப்பத்தில் தமது அன்புக்குப் பாத்திரமான போராளிகள் சிங்களத்தின் சூழ்ச்சிக்குப் பலியானார்கள் என்பதை சாதாரணமாகவே தமிழ் மக்களால் ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சோகத்தினதும், கோபத்தினதும் வெளிப்பாடு, வன்முறைகளாக தமிழ் பிரதேசங்களில் சில நாட்கள் தொடர்ந்தன…

பகிரல்

கருத்தை பதியுங்கள்