அமெரிக்கா மீது ஒரு சந்தர்ப்பத்தில் அணு ஆயுத தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அல்லது அமெரிக்கா இராணுவத்தின் மொத்த தரைத் தொடர்பும் அழிக்கப்படும் ஒரு நிலை உருவாகும் பட்சத்தில், அமெரிக்காவின் போர் இயந்திரம் எப்படியான தாக்கத்திற்கு உள்ளாகும்?
இந்தக் கேள்விக்கு: E4-B என்ற சிறப்பு விமானம் அமெரிக்காவின் கட்டனைப் பீடமாக (Pentagan) செயற்படும் என்பதுதான் பதில்.
பொருளாதார வளர்ச்சியும் அதன் ஏற்றங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது ஆயுத ரீதியில் வல்லரசுகள் பெரும் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த இராணுவ நகர்வு திட்டங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உச்சத்தைத் தொடும் அளவிற்கு வளர்ச்சிப் பாதையில் நிற்கின்றன.
இந்நிலையில், அணு ஆயுதப் போரும், அதன் பரிசோதனை நடவடிக்கைகளும், இராணுவத் திட்டங்கள் தொடர்பிலும் ஓர் விரிவான பார்வையை செலுத்துகிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: