உளவியல் யுத்தம் அல்லது உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற முக்கியமான ஒரு விடயம் பற்றü இந்தத் தொடரில் சற்று விரிவாக ஆராயந்துகொண்டிருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உளவியல் யுத்தங்கள் பற்றி பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சர்வதேசப் போரியல் அரங்குகளில் முக்கியத்துவம் பெற்ற சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி முதலில் நாம் பார்த்து வருகின்றோம்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா இராணுவத்தினர், இந்தியப் படைகள் போன்றன ஈழக் களங்களில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் சில பற்றியும் விரிவாக ஆராய இருக்கின்றோம்.
உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பற்றித்தாம் தற்பொழுது ஆராந்துகொண்டு இருக்கின்றோம்.
அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது.
இந்த வகையிலான உளவியல் நடவடிக்கையை மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, போரிடுகின்ற அனைத்து தரப்புக்களுமே செய்வது வளக்கம்.
மிகவும் பிரபல்யமாக ஜப்பானிய போர் வீரர்களான சாமுராய் வீரர்கள் மத்தியில் ஒரு முக்கியமாக போரியல் நுனுக்கம் இருக்கின்றது. அதாவது, நேரடிச் சண்டைகளில் எதிரியை வீழ்த்தும் முன்னதாக, எதிரியின் உளவியலை வீழ்த்திவிடவேண்டும் என்பது சாமூராய்களின் அடிப்படைப் போரியல் பாடம். சண்டைக்கு வரும் எதிரியை அடிக்கும் முன்னதாக அவனது உளவிலை அடித்துவிடுவது என்பது, சாமுராய்கள் கடைப்பிடித்துவந்த போரியல் யுக்தி.
இன்றைய நவீன போரியல் நடவடிக்கைகளிலும், இந்த யுக்தி பல வழிகளிலும் பல தரப்பினராலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வியட்னாம் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில், கனோய் கன்னா(Hanoi Hannah), என்ற பெண் ஊடகவியலாளர் மேற்கொண்டிருந்த உளவியல் போர், உலகின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவம், வியட்னாமின் வியட்கொங் கெரிலாக்களிடம் படுதோல்வியைச் சந்திக்கக் காரணமாக இருந்தது பற்றி கடந்த வாரம்; ஓரளவு விரிவாக ஆராய்ந்திருந்தோம்.
இந்த வாரமும், கடந்த நூற்றாண்டில் ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட மேலும் இரண்டு உளவியல் நடவடிக்கைகள் பற்றிச் சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.
இரண்டாம் உலகமகா யுத்தம் மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஜப்பான் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுகொண்டிருந்த நேசநாட்டுப்படைகளை தடுமாறவைத்த ஒரு விடயம் இருக்கின்றது.
அதுதான், ரேடியோ டோக்கியோ என்கின்ற ஜப்பானிய வானொலி.
இந்த வானொயின் ஆங்கில சேவையில்“The Zero Hour” என்ற ஒரு நிகழ்சி, நேசநாட்டுப் போர் வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியிருந்தது. இந்த நிகழ்சியை கவர்சிகரமான தனது குரலினூடாக, மிகவும் வெற்றிகரமாக நடாத்திக்கொண்டிருந் பெண் ஒலிபரப்பாளர் தன்னை டோக்கியோ ரோஸ் (Hanoi Hannah) என்று அழைத்துக்கொண்டார்
டோக்கியோ ரோஸ் என்ற இந்தப் பெயர் நேசநாட்டுப் படையினர் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியிருந்தது. குறிப்பாக ஆசிய நாடுகளில் சண்டைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேசநாட்டுப் படையினர் இந்த டோக்கியோ ரோசினுடைய நிகழ்சிகளைக் கேட்காமல் உறங்குவதில்லை. அந்த அளவிற்கு இவருடைய நிகழ்சிகள் நேசநாட்டுப் போர்வீரர்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்தது.
அப்படி என்ன இவரது நிகழ்சியில் முக்கியமானதாக இருந்தது?
ஜப்பானியப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த நேசநாட்டுப் படைவீரர்களைச் செவ்விகண்டு, தனது நிகழ்சியில் ஒலிபரப்பினார் டோக்கியோ ரோஸ் என்ற அந்த வானொலி ஒலிபரப்பாளர்.
நேசநாட்டுப் படைகள் அந்த யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்று கைதுசெய்யப்பட்டு போர்க்கைதிகளாக இருந்த நேசநாட்டுப் படை வீரர்கள் வானொலியில் கூறினார்கள்.
நேசநாட்டுப் படைத்துறை அதிகாரிகள் எப்படி சொகுசு வாழ்கை வாழ்ந்துகொண்டு, கீழே உள்ள படைவீரர்களை அநியாயத்திற்குப் பலிகொடுத்து வருகின்றார்கள் என்று கவலைப்பட்டார்கள்.
இராணுவத்தில் உள்ள ஓட்டைகள், இழுபறிகள், இழப்புக்கள், இரகசியங்கள்.. இப்படி பல விடயங்களை தம்மிடம் சரணடைந்த அல்லது தம்மால் கைதுசெய்யப்பட்ட நேசநாட்டுப்படைவீரர்களிடம் இருந்து சித்திரவதை செய்தும், மிரட்டியும் பெற்றுக்கொண்ட ஜப்பானியப் படையினர், அவற்றினை டோக்கியோ ரோசினுடைய நிகழ்சியினுடாக ஒலிபரப்பினார்கள்.
நேசநாட்டுப்படை வீரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய விடயங்கள் இவைகள்தான்.
விழுந்தடித்துக்கொண்டு இந்த நிகழ்சிகளைக் கேட்டார்கள் நேசநாட்டுப்படைவீரர்கள்.
ஆனால் இந்த நிகழ்சிகளில் ஒலிபரப்பான விடயங்கள், அந்த நிகழ்சியைச் செவிமடுத்த நேசநாட்டுப்படைவீரர்களை பாரிய அளவில் உளவியல் சோர்வடைய வைத்தது. இராணுவத் தலைமை மீதான சந்தேகம், மற்றைய நேசநாடுகள் மீதான வெறுப்பு, காழ்ப்புணர்வு, ஜப்பானியப்படை பற்றிய அச்சம், நம்பிக்கையீனம் என்று பலத்த உளவியல் சோர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
இரண்டாம் உலகமகாயுத்தகாலத்தில் ஜப்பானுக்கு எதிராக நேசநாட்டுப்படைகளின் சண்டைகளில் அந்தப்படைகளுக்கு பாரிய நெருடல்களை ஏற்பட்டுத்திய ஒருவிடயம் என்று – இந்த உளவியல் யுத்தத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்: ஒரு சந்தர்பத்தில் ஜப்பானியப்படைகளை தம்மால் வெல்லமுடியாமல் போய்விடுமோ என்று நேசநாட்டுப்படைத்துறைத் தலைமை நினைக்கும் அளவிற்கு இந்த உளவியல் யுத்தம் பாரிய தாக்கத்தினை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.
இத்தனைக்கும் அந்த உளவியல் யுதத்தை நடாத்திய டோக்கியோ ரோஸ் என்ற ஜப்பானியப் பெண் ஒரு அமெரிக்கப் பிரஜை என்பது, இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர உலகிற்குத் தெரிய வந்தது. டோக்கியோ ரோஸ் என்ற பெயரில் உளவியல் யுத்தத்தை நடத்திய பெண்ணை அமெரிக்கப் படைகள் ஒரு சந்தர்பத்தில் கைது செய்திருந்தார்கள்.
அமெரிக்கப்பிரஜா உரிமையைப் பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இவா டோக்கூறி (ஐஎய ஐமரமழ வுழபரசi ) என்ற பெண்ணே டோக்கியோ ரோஸ் என்ற பெயரில், நேசநாட்டுப் படையினருக்கு எதிரான உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்திருந்தார் என்கின்ற உண்மை அமெரிக்கப் படைகளை மாத்திரமல்ல முழு உலகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது..
இதேபோன்று, இரண்டாம் உலகமகாயுத்த காலத்தில் உலகப் பிரசித்திபெற்ற பீ.பீ.சி செய்தி ஊடகம் ஒரு முக்கிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டிருந்தது.
1940ம் ஆண்டு மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியா மீது ஜேர்மனி ஒரு பாரிய ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் சாத்தியம் காணப்பட்டது. இதற்கு முன்னோடியாக ஜேர்மனி தனது சக்தி வாய்ந்த போர்விமானங்களின் துணைகொண்டு வான் வழித் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டிருந்தது..
அந்தக் காலப்பகுதியில், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியா மீது ஒரு ஆக்கிரமிப்புப் பாய்ச்சலை மேற்கொள்ளும் திட்டத்தில் ஜேர்மணியப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஜேர்மனியின் சக்திவாயந்த படை அணிகள். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதன் ஆயுதக் கண்டுபிடிப்புக்கள். எண்ணிக்கையில் அதிகமான இராணுவத்தினர். அந்த நேரத்தில் இப்படியான பலத்தைத் தனதாகக் கொண்டிருந்த ஜேர்மனி பிரித்தானியாமீது தாக்குதல் நடாத்தியிருந்தால், நிச்சயமாகவே ஜேர்மனியிடம் பிரித்தரியா இலகுவாக வீழ்சி கண்டிருக்கும் என்றே போரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
அந்த நேரத்தில் பிரித்தானியா மிகவும் பலவீனமானதொரு நிலையிலேயே இருந்தது. அதனுடைய படைகள் ஆசியாவின் பல இடங்களிலும் நிலைநிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், ஜேர்மனின் பலம் மிக்க படையெடுப்பைத் தடுத்துநிறுத்துவது தம்மால் முடியாது என்று உணர்ந்து பிரித்தானிப்படைத்துறை அதிகாரிகள் கலங்கி நின்றார்கள். பிரித்தானியா ஜேர்மனியிடம் வீழ்வது உறுதி என்றே பிரித்தானிய தலைவர்கள் நம்பினார்கள்.
பிரித்தானியாவை தம்மால் கைப்பற்றிவிட முடியும் என்றே ஹிட்லரும் உறுதியாக நம்பினார்.
பிரித்தானியாவின் தோல்வியும், ஜேர்மனியில் வெற்றியும் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்த நிலையில், களமுனையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது பீ.பீ.சி. வானொலி.
தோல்வியின் விழிம்பிலிருந்த பிரித்தானியாவை, முக்கிய உளவியல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதன் ஊடாக பீ.பீ.சி. காப்பாற்றியிருந்தது.
அப்படி என்னதான் செய்தது பீ.பீ.சி.?
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை கபளீகரம் செய்யத் தயாராகிக்கொண்டிருந்த ஜேர்மனியப் படையினரின் உளவியலில் ஒருவிதப் பீதியை ஏற்படுத்திவிடும் பணியியை பீ.பீ.சி. வானொலி செய்தது.
எப்படி அதைச் செய்தது பீ.பீ.சி.?
தனது நிகழ்சி ஊடகாகச் செய்தது.
தற்பொழுது உள்ளது போலவே அந்த நேரத்திலும் பீ.பீ.சி. வானொலி சேவைகளை ஐரோப்பாவில் உள்ள பலரும் விரும்பிக் கேட்டு வந்தார்கள். ஜேர்மனியர்களும் பீ.பீ.சி. யை விரும்பிக் கேட்பது வழக்கம்.
குறிப்பாக பீ.பீ.சி வானொலி ஒலிபரப்பிய ஆங்கிலப் பாட நிகழ்சி மற்றும் ஜேர்மன் டொச் பாட நிகழ்சிகளை ஜேர்மனியர்கள் விரும்பிக் கேட்பது வளக்கம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட பீ.பீ.சி., தனது பாட நிகழ்சிகளின் ஊடாக ஒரே ஒரு முக்கிய கருத்தை பல வடிவங்களில் திரும்பத் திரும்ப ஜேர்மனியர்களுக்கு கூற ஆரம்பித்தது.
அப்படி என்ன கருத்தை பீ.பீ.சி. ஜேர்மனியர்களுக்கு கூறியது?
ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையத் தயாராக இருந்தன அல்லவா ஜேர்மனியப் படைகள்? அப்படி அவர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வரும்பொழுது, அவ்வாறு கடக்கின்ற ஜேர்மனியப் படையினர் அத்தனை பேரையும் ஆங்கிலக் கால்வாயில் வைத்தே எரித்துக் கொன்றழித்துவிடக்கூடியதான ஒருவகை இரசாயன குண்டுகளை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று பீ.பீ.சி. வானொலி ஒருவித கதையை கட்டவிழ்துவிட்டிருந்தது.
ஆரம்பத்தில் வெறும் வதந்தியாக வெளிவந்த இந்தக் கதை, தொடர்ந்து படிப்படியாக பாட நிகழ்ச்சிகளின் ஊடாகவும், பாடல்கள், கவிதைகள் ஊடாகவும் எதிரியின் காதுகளுக்கு சென்றுகொண்டிருந்தன. அதனைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தது பீ.பீ.சி.வானொலி.
ஆரம்பத்தில் இதனை சந்தேகமாக நோக்கிய ஜேர்மனியப் படைகள் படிப்படியாக இந்தச் செய்தியை நம்ப ஆரம்பித்தார்கள். ஆங்கிலக் கால்வாய்க்கு இறங்குவதற்கு ஜேர்மனியப் படைவீரர்கள் அச்சப்பட்டனர். அந்தக் கால்வாய்க்குள் இறங்கும்படியான உத்தரவை பிறப்பிப்பிதற்கும் நாசிப் படை அதிகாரிகள் தயக்கம் காண்பித்தார்கள். கடைசியில், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை ஆக்கிரமிக்கும் தமது போர்த் திட்டத்தையே கைவிட்டது ஜேர்மனியத் தலைமை.
ஒரு பெரும் போரையே தடுத்துநிறுத்தி தனது நாட்டை பெரும் அழிவில் இருந்து காப்பாற்ற பீ.பீ.சி. மேற்கொண்ட அந்த உளவியல் நடவடிக்கை இன்றைக்கும் போரியல் நோக்கர்களால் வியந்து பாராட்டப்படுகின்றது.
இதேபோன்று உலக போரியல் வாலாற்றில், ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள் ஏராளம் இருக்கின்றன.
தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான இந்த முக்கிய உளவியல் நடவடிக்கையை, உலகின் பல இராணுவங்களும் மேற்கொண்டு பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.
(எமது வாசகர்கள் விரும்பினால் இந்த நடவடிக்கைகள் பற்றி மற்றொரு சந்தர்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.)
தற்பொழுது, இந்த உளவியல் நடவடிக்கைள் ஈழ யுத்தத்தில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி ஆராய இருக்கின்றோம்.
ஊடகங்களைப் பாவித்து, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்து, தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் இந்தவகை உளவியல் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளும், சிறிலங்கா இராணுவமும் கடந்த காலங்களில் எவ்வாறு மேற்கொண்டிருந்தன என்று, அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்..