23ம் திகதி ‘கறுப்பு ஜுலை’ யாருக்கு? தமிழருக்கா- சிங்களவருக்கா?

0

‘கறுப்பு ஜுலை தினம்’ என்று வருடா வருடம் ஜுலை 23ம் திகதியை நினைவு கூர்ந்து வருகின்றோம்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர் மீதான அந்த திட்டமிட்ட ‘இன அழிப்பு’ 1983ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் திகதி இரவுதான்தான் ஆரம்பமானது – 23ம் திகதி அல்ல என்று வாதிடுகின்றார்கள் சில நோக்கர்கள்.

1983ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் திகதி இரவு கொழும்பு டி.எஸ். சேனநாயக்க மாவத்தையிலுள்ள ‘நாகலிங்கம் ஸ்டோஸ்’ என்ற தமிழ் கடை மீதான தாக்குதலுடன்தான் தமிழர்கள் மீதான வன்முறை ஆரம்பமானது.

எனவே ஜுலை 23ம் திகதிக்குப் பதிலாக 24ம் திகதியையே ‘கறுப்பு ஜுலை’ தினமாக தமிழ்கள் நினைவுகூறவேண்டும் என்பது அந்த தரப்பினது வாதமாக இருக்கின்றது.

ஜுலை 23ம் திகதி தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட வன்முறை எதுவும் நடைபெற இல்லை. சிறிலங்கா இராணுவத்தின் பதில் தாக்குதல் நடவடிக்கை அல்லது பழிவாங்கும் தாக்குதல் நடவடிக்கைதான் நநடைபெற்றது. சிறிலங்கா தேசத்தின் திட்டமிட்ட இன அழிப்பு ஜுலை 24ம் திகதிதான் ஆரம்பமானது.

இவ்வாறு, அந்த தமிழ் ஆர்வலர்கள் ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றார்கள்.

ஊடகப் பரப்பில் பெரிதாகப் பேசப்படாத, அதேவேளை இன அழிப்பு என்கின்ற விடயத்தில் கனிசமான தாக்கத்ழத ஏற்படுத்தக்கூடியதான இந்த வாதம் பற்றி நாம் சற்று ஆழமாகப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றென்.

1983ம் ஆண்டு ஜுலை 23 ஆம் திகதி; இரவு 11.35 மணி அளவில். தமிழீழ விடுதலைப்புலிகள் சிறிலங்கா இராணுவத்தின் வாகனத்தின் மீது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொடார்கள்.

“4-4 பிராவோ” என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் வீதி உலா அணி மீது, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட மொத்தம் 13 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

23ம் திகதி இரவு 11.35 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்று சுமார் 1 மணி நேரத்திற்குப் பின்னர் சம்பவ இத்திற்கு விரைந்த மேலதிக இராணுவத்தினர், அப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த சுமார 51 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்து, தமது கோபத்தை தீர்த்துக்கொண்டார்கள்.

இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடத்தக்கது.

முதலாது, ஜுலை 23ம் திகதி நடைபெற்றது சிறிலங்கா இராணுவத்தினர் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல் மாத்திரம்தான்.

24ம் திகதி அதிகாலை 12.30 மணிக்குப் பின்னர்தான் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆக, ஜுலை 23ம் திகதி தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடைபெற்றதா என்ற கேள்விக்கு- ‘இல்லை’ என்றேதான் பதில் காணப்படுகின்றது.

அடுத்தது, நிருநெல்வேலி மற்றும் மாணிப்பாய் பிரதேசங்களில் ஜுலை23ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் அல்லது ஜுலை 24ம் திகதி அதிகாலையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் என்பதை, திட்டமிட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்ற வரையறைக்குள் கொண்டுவருவது மிகுந்த சிரமம் என்று சில மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு இனத்தை இல்லாது ஒழிக்கும் நோக்கத்தோடு இராணுவத்தின் அந்தத் தாக்குதல் நடைபெற்றது என்பதற்கு அப்பால், தமது சக இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் கோபம் கொண்ட இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஒரு நடவடிக்கை என்ற ரீதியில்தான் கூடியவரை அந்தத் தாக்குதல் அணுகப்படும் என்று கூறுகின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் இடைநடுவில் அகப்பட்டுக்கொண்டவர்கள், புலிகளின் நடவடிக்கைக்கு உதவியவர்கள், புலிகளால் பாதுகாப்புக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்டவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள், என்று – கொல்லப்பட்ட அந்த அப்பாவித் தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் கூறுவதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

தமது நன்பர்களின் இழப்பால் கோபமுற்ற படையினர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கொண்ட ஒரு தாக்குதல் என்று அந்தத் தாக்குதலை உலகமும், சட்டமும் பார்ப்பதட்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

எனவே, யாழ் நகரில் நடைபெற்ற அந்தத் தாக்குதல் இன அழிப்பு என்கின்ற வரையறைக்குள் வராமல் நழுவிவிடுவதற்காக ஆபத்துக்கள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், ஜுலை 24ம் திகதி இரவு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆரம்பமான நடவடிக்கைகள் அப்படிப்பட்டதல்ல.

சிறிலங்கா அரசினால், அதன் அரச தலைமையினால் திட்டமிடப்பட்டு, சிறிலங்காவின் ஆழும் அமைச்சர்கள் பலரது நேரடி வழி நடாத்தலில், சிறிலங்கா படையினரின் பாதுகாப்புடன், சிங்கள இனத்தவரால், தமிழரை அழிக்கும் நோக்குடன், தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலில் இடையூறு செய்யும் நோக்குடன், தமிழரின் பொருளாதாரம், கல்வி என்பனவற்றை சிதைக்கும் நோக்குடன் திட்டமிட்ட அiடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம்தான்- கொழும்பிலும், தென் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழருக்கு எதிரான அந்த வன்முறை நடவடிக்கைகள்.

ஒரு இன அழிப்பு என்ற வரையறைக்குள் மிக இலகுவாகக் கொண்டுவந்து பொருத்திவிடக்கூடிய பல சாதகமான அம்சங்கள் இதில் இருக்கின்றன.

அதாவது, ஜுலை 24ம் திகதிக்குப் பிந்திய சம்பவங்களை நாம் கணக்கில் எடுத்தால் மாத்திரம்தான் இதில் சாதகமான விடயங்கள் தமிழருக்கு இருக்கின்றன.

ஆனால், ஜுலை 23ம் திகதியை நாங்கள் கருப்பு ஜுலையாக அனுஷ;டிக்கின்ற பொழுது, மனித உரிமைகள் விடயத்தில் தமிழருக்குச் சாதகமான விடயங்கள் பெரிதான இல்லை என்றே கூறவேண்டும்.

அந்த நாளில் விடுதலைப்புலிகள் என்ற ஒரு ஆயுத போராட்ட அமைப்பு ஒரு அரசாங்கத்தின் உத்தியோபூர்வ இராணுவத்தின் மீது நடாத்திய தாக்குதல் என்பது மாத்திரம்தான் பதிவில் இருக்கின்றது.

இன அழிப்பு தினம் என்று 23 ஜுலையை அடையாளப்படுத்துவதில் உள்ள பாதகமான அம்சம் இது என்பதில் சந்தேகம் இல்லை.

ஜுலை 23ம் திகதி என்பது சிங்களவருக்கு அல்லது சிங்களப் படையினருக்கு அல்லது சிங்கள அரசாங்கத்திற்கு வேண்டுமானால் ஒரு ‘கறுப்பு ‘ தினமாக இருக்கலாம்.

ஏனென்றால் சிங்கள வரலாற்றில் தமிழர் தரப்பு திருப்பி அடித்து ஒரு மிகப் பெரிய இழப்பை சிங்களத்திற்கு ஏற்படுத்திய முதலாவது சம்பவம் என்று அன்றைய சம்பவத்தை குறிப்பிடலாம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்