மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-19)- நிராஜ் டேவிட்
நாம் வாழுகின்ற இந்தப் பூமிப் பந்தை பல தடவைகள் அழிவின் விழிம்பிற்குக் கொண்டுசென்றிருந்த பனிப்பேரின் ஆரம்பம் பற்றிய பதிவு இது.
ஹிட்லரை தோற்கடிக்கவேண்டும் என்ற குறிக்கோளில் ஒரே அணியில் நின்ற அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், சோவியத் ஒன்றியமும் எதற்காக ஒன்றை ஒன்று விரோதித்துக்கொண்டன?
எப்பொழுது முதல் அவை ஒன்றை ஒன்று விரோதிக்க ஆரம்பித்தன.?
சூதுகளினாலும், சதிகளினாலும், துரோகங்களினாலும் நிறைந்த பனிப்போரின் அதிர்ச்சிகரமான முதலாவது அத்தியாயத்தை தாங்கி வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.