மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-22)- நிராஜ் டேவிட்
கண்மூடித்தமான கமீயூனிச எதிர்ப்பு அமெரிக்காவை எப்படி முகம்குப்புற விழும்படி செய்தது என்பதற்கு வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட படுதோல்வி ஒரு நல்ல உதாரணம். நானூறு வருட அமெரிக்க வரலாற்றில், அந்த தேசம் சந்தித்த மிக மோசமான தோல்வி என்று ஒன்று உண்டென்றால், அது வியட்நாமில் அமெரிக்கா சந்தித்த தோல்வியைத்தான் குறிப்பிட வேண்டும்.
53,000 அமெரிக்க படைவீரர்கள் வியட்னாம் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். 3 இலட்சம் அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்திருந்தார்கள். இரண்டு தசாப்தங்கள் நடைபெற்றதும், நான்கு மில்லியன் உயிர்களைக் காவுகொண்டதும், அமெரிக்காவின் போரியல் வரலாற்றில் முதலாவது மிகப்பெரிய படுதோல்வியை அமெரிக்காவுக்கு வழங்கியதுமான வியட்நாம் யுத்தத்தின் பின்னணி பற்றியும், அந்த யுத்தத்தில் அமெரிக்கா எவ்வாறு நுழைந்தது என்பது பற்றியும் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி!