பொதுமக்கள் உயிரிழப்புக்களை பெருமளவில் ஏற்படுத்த விரும்பிய சதாம் ஹுசைன்|(மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-33)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-33)- நிராஜ் டேவிட்

அமெரிக்கா தலைமையிலான படைகளின் ஆரம்பகட்டத் தாக்குதல்கள் இந்த அளவிற்கு இருக்கும் என்று சதாம் குசைன் நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்பார்ததற்கு அதிகமான பலம் அமெரிக்காவால் தனக்கெதிராகப பிரயோகிக்கப்பபடுவது கண்டு அதிர்ந்தார்.

அமெரிக்கப்படைகள் உபயோகிக்க ஆரம்பித்திருந்த நவீன போரியல் யுக்திகள், அதிநவீன போரியல் உபகரனங்கள், ஈராக் அதிகாரிகளை திகைப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தன.

மேற்குலகின் தாக்குதல் வேகத்தைக் குறைக்கவேண்டுமானால், தன்னிடமுள்ள ஆயுத பலத்தால் அது நிச்சயம் முடியாது என்பது சதாமுக்கு நன்றாக விளங்கியது. வேறு வகையிலான நிர்ப்பந்தங்களினால்தான் அதனை முயற்சித்துப் பார்க்கவேண்டும்.

பொதுமக்கள் இழப்புக்களை அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் விரும்பமாட்டார்கள். பொதுமக்களது இழப்புக்கள் பலவிதமான நிர்பந்தங்களை மேற்குலகிற்கு உருவாக்கும். அரேபியர்கள் அழிவுக்குள்ளாகும் நிலை உருவானால் அரபு தேசங்கள் ஈராக்கிற்கு எதிரான யுத்த முனைப்புக்களில் இருந்து பின்வாங்கும் நிலை உருவாகும்.

அத்தோடு, இந்த யுத்தத்தில் எப்படியாவது இஸ்ரேலையும் உள்நுழையவைத்துவிடுவதும் சதாமின் மற்றொரு முக்கிய நோக்கமாக இருந்தது. இஸ்ரேல் மீது தாக்குல்களை நடாத்தி இஸ்ரேலில் பொதுமக்கள் இழப்புக்களை ஏற்படுத்தி, இஸ்ரேலை தூண்டி, இஸ்ரேலும் ஈராக்கிற்கு எதிரான தாக்குதல்களில் இணையவைத்துவிட்டால், அரபு உலகம் ஈராக்கின் பக்கம் வருவதைத் தவிர வேறு வழியே இருக்காது. எனவே இஸ்ரேல், மற்றும் சவுதி அரேபிய்பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம், யுத்தத்தை நிறுத்தும்படியான நிர்பந்தத்தை மேற்குலகிற்கு உருவாக்க முடிவு செய்தார் சதாம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்