மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாகவே மட்டக்களப்பை விட்டு வெளியேறவேண்டும் என்று கருணா தரப்பினர் உத்தரவு பிறப்பித்தார்கள்.
தமது உடமைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, வெறும் 500 ரூபாய் பணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு வட பகுதி வர்தகர்கள் வெளியேறவேண்டும். 24 மணிநேரத்திற்குள் அப்படி வெளியேறத்தவறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணா தரப்பினர் கடுமையாக எச்சரித்தும் இருந்தார்கள்.
வடபகுதியைச் சேர்ந்த சுமார் 5000 பேர் வரையில் அன்றைய தினமே கிழக்கைவிட்டு வெளியேறிய அவலநிலை கிழக்கில் உருவாணது.
பல தசாப்த காலமாக கிழக்கில் வாழ்ந்தவர்கள்… தலைமுறைதலைமுறையாக கிழக்கில் வாழ்ந்தவர்கள், கிழக்கின் பொருளாதார வளர்சியில் மிகப் பெரிய பங்காற்றியவர்கள்- ஒரே நாளில் கிழக்கைவிட்டு வெளியேற்றப்பட்ட மிகப் பெரிய கொடுமை, கருணா தரப்பினரால் கிழக்கில் அரங்கேற்றப்பட்டது.
ஒரு மேசமான வரலாறு, ‘பிரதேசவாதம்’ என்ற பெயரால் கிழக்கின் சரித்திரத்தில் கருணாவினால் எழுதப்பட்டது.

VALAICHENAI, SRI LANKA - DECEMBER 08: A Sri Lanka paramilitary Karuna soldier mans a checkpoint on December 8, 2006 in Valaichenai in eastern Sri Lanka. Tamil paramilitary soldiers from the "Karuna faction" broke off with rebels to join government troops in Sri Lanka's civil war. With Sri Lanka's peace process in tatters, government forces and rebels from the Liberation Tigers of Tamil Eelam (LTTE), have been fighting all along their former ceasefire line. The fighting has driven thousands of people from their homes. More than 3,000 people have died in the renewed ethnic conflict this year, which has claimed more than 60,000 in decades of civil war. (Photo by John Moore/Getty Images)
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -13) – நிராஜ் டேவிட்
0முன்னைய பாகங்கள்
பகிரல்