சவுதியில் இருந்து புறப்பட்ட முஸ்லிம் இளைஞன்- கலங்கின ரஷ்யாவும் அமெரிக்காவும் | (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-37)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-37)- நிராஜ் டேவிட்

1979ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி சோவியத் ஒன்றிய ராணுவத்தின் 40வது பிரிவு அப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும் நோக்தோடு அந்த மண்ணில் வந்திறங்கியது.

1988ம் ஆண்டு வரையிலான சுமார் ஒரு தசாப்த காலம் அப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு என்பது, சொல்லமுடியாத வேதனையை அப்கான் மக்களுக்கும், அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியை உலகம் முழுவதற்கும் ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில், அப்கானிஸ்தான் களத்தில் அமெரிக்காவின் சீ.ஐஏயும் இறங்கி நின்று விளையாடியது.

இந்த இரண்டு வல்லரசுகளின் போட்டியின் இடைநடுவே அகப்பட்டு அப்கானின் அப்பாவி மக்கள் அநியாயமாக பலியானார்கள்

சுமார் 20 லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டு, மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக அப்கானிஸ்தானைவிட்டு இடம்பெயரக் காரணமானதும், சோவியத் ஒன்றியம் சிதறுவதற்காள அத்திவாரத்தை இட்டதுமான ஆப்கான் சோவியத் யுத்தம் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்