மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-20)- நிராஜ் டேவிட்
அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் சுமார் நான்கு தசாப்தங்களாக நடைபெற்றுவந்த பனிப்போரின் ஒரு முக்கியமான அத்தியாயம் கொரிய தேசத்தில் எழுதப்பட்டது என்று கூறலாம்.
இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஆரம்பமான ‘Cold War’ என்று அழைக்கப்படும் பனிப்போர், முதன்முதலில் பிரமாண்டமாக வெடித்த ஒரு இடம்தான் கொரியப் போர்.
கொமியூனிச சித்தாந்தத்தை உலகம் முழுவம் முடியுமானவரை பரப்பத் துடித்த சோவியத் ஒன்றியமும், கொமியூனிசத்தை பூண்டோடு வெறுத்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவும் கிட்டத்தட்ட நேரடியாகவே மோதிப்பார்த்த இடம் என்று கொரிய யுத்தத்தைக் கூறலாம்.
- எதற்காக வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டது?
- எதற்காக கொரிய யுத்தம் ஏற்பட்டது?
- அமெரிக்காவுக்கும், சோவியத்திற்கும் இடையிலான பனிப்போரின் நடுவே கொரியா எப்படி அகப்பட்டுக்கொண்டது?
- மூன்றாம் உலக யுத்தத்தின் தோற்றுவாயாக இருக்கிலாம் என்று பரவலாக நம்பப்படுகின்ற கொரியப் பதட்டத்தின் உண்மையான காரணம் என்ன?
1950 ஆம் ஆண்டு ஆரம்பமானதும், இன்றுவரை தொடர்கின்றதுமான வடகொரியாவிற்கும்- தொன் கொரியாவிற்கும் இடையிலான அந்த முக்கியமான யுத்தம் பற்றியதான பார்வையைச் செலுத்துகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: