விடுதலைப் புலிகளினுடைய போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம்.
விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில், எதிரிக்கு ஒருவித உளவியல் பீதியை ஏற்படுத்தவேண்டிய தேவை போராட்ட அiமைப்புகளுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. எதிரியின் உளவியலைக் குறிவைக்காவிட்டால், ஆயுதவழிப் போராட்டத்தை மேலும் நகர்த்த முடியாத சங்கடங்கள் அந்தக் காலகட்டத்தில் காணப்பட்டன. அதேவேளை, எதிரிக்கும், உலகிற்கும் தம்மை அறிமுகப்படுத்தி, „உங்களை அச்சுறுத்தும் தரப்பினர் நாங்களே’ என்று செய்தி சொல்லவேண்டிய தேவையும் போராட்ட அமைப்புகளுக்கு இருந்தன.
குறிப்பாக விடுதலைப் புலிகள் இந்த உளவியல்; சவாலை மிகவும் லாவகமாகச் சந்திக்கத் தலைப்பட்டார்கள்.
1978ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி விடுதலைப் புலிகள் தம்முடைய தாக்குதல்களுக்கு உரிpமை கோரி ஊடகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்து, உலகிற்குத் தம்மை அறிமுகப்படுத்திய அதேவேளை, சிங்களத்திற்கு கிலியையும் ஏற்படுத்தியிருந்தார்கள்.
புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், யாழ் நகர மேயர் அல்பிரட் துரையப்பா முதல் இங்ஸ்பெக்டர் பஸ்தியான்பிள்ளை மீதான தாக்குதல்கள், வங்கிக்கொள்ளைகள் என்று, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 11 தாக்குதல் சம்பவங்களுக்கு அந்தக் கடிதத்தில் உரிமை கோரியிருந்தார்கள்.
சிறிலங்காவின் பத்திரிகைகளுக்கும், சிறிலங்காவில் இருந்த மற்றைய நாட்டுத் துதராலயங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட இந்தக் கடிதங்கள், விடுதலைப் புலிகள் தொடர்பாக ஒரு பெரிய உளவியல் பீதியை (குநயச pளலஉhழ) சிங்களத்திற்கு ஏற்படுத்தியிருந்தது.
ஷவிடுதலைப் புலிகள்ஷ என்ற பெயர் அச்சத்துடன் நோக்கப்படும் ஒரு பெயராக உருவாகுவதற்கு புலிகள் அனுப்பி வைத்த இந்தக் கடிதங்களே முதன்மைக் காரணமாக அமைந்தது.
புலிகளின் உரிமை கோரல்கள் சிறிலங்காவினதும், தமிழ்நாட்டினதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியானது.
விடுதலைப் புலிகள் என்ற பெயர் அனைவராலும் அச்சத்துடன் உச்சரிக்கப்படத் தொடங்கியது.
அந்தக் காலகட்டத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடிய போராட்ட அமைப்புக்கள் அனைத்தையுமே, ‘கொட்டியா’ என்றே சிங்கள மக்கள் அழைப்பதற்கு இந்தக் கடிதமே காணமாக அமைந்தது.
இந்தியாவில் அனைத்துப் போராட்ட அமைப்பினது போராளிகளையும் ‘விடுதலைப் புலிங்க..’ என்று அங்குள்ளவர்கள் குறிப்பிடுவதற்கும், புலிகள் புலிச்சின்னம் பொறித்து அனுப்பிய அந்தக் கடிதமே முதன்மைக் காரணமாக அமைந்தது.
புலிச்சின்னத்தையும், அதனைச் சூழ இருந்த இரண்டு துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் கண்ட சிங்களவர்கள் அச்சம் அடைந்தார்கள்.
தமது கடிதம் மூலம் எதிரிக்கு உளவியல் பீதிக்கான ஒரு நல்ல மேடையை அமைத்துக்கொண்ட விடுதலைப் புலிகள், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையானது, எதிரியை ஒருவித உளவியல் பீதிக்குள் தொடர்ந்து வைத்துக்கொண்டு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையை உருவாக்கப் பெரிதும் உதவியிருந்தது.
சிங்களத்திற்கும், உலகிற்கும் ஒரு பெரும் உளவியல் பீதியை ஏற்படுத்தும்படியாக அமைந்த அந்தச் சம்பவம் 1978ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி நடைபெற்றது.
1978ம் ஆண்டு தமிழ் மக்களை முற்றுமுழுதாக அடிமைகளாக்கும் அரசியல் யாப்பு சிறிலங்காவின் பாராளுமன்றில் முன்மொழிப்பட்டது. அந்த அசியல்யாப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நாளில் விடுதலைப் புலிகள் கொழும்பில் ஒரு பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். கொழும்பு ரெட்மலானை விமான நிலையத்தில் சிறிலங்காவிற்குச் சொந்தமான ஒரு அவ்ரோ விமானத்தை குண்டுவைத்தத் தகர்த்தார்கள். இந்தத் தாக்குதலால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மூன்றரைக் கோடி ரூபாய் நஷ்டம்(அந்தக் காலகட்டத்தில் இது மிகப் பெரிய தொகை) ஏற்பட்டது ஒரு புறம் இருந்தாலும், இந்தத் தாக்குதல் மூலம் சிங்களத்திற்கு ஏற்பட்ட உளவியல் பீதிதான் பாரிய பின்னடைவை சிங்களத்திற்கு ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தாக்குதல் இடம்பெற்ற மறுதினமே விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரி, ஊடகங்களுக்கும், வெளிநாட்டு துதராலயங்களுக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் மத்திய குழு இந்தக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தது.
விடுதலைப் புலிகளால் எங்கும், எதையும் செய்துவிடமுடியும் என்கின்ற உளவியல் அச்சத்தை சிங்களத்திற்கு ஏற்படுத்திய ஒரு சம்பவமாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.
விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றை மிக நுனுக்கமாக ஆராய்ந்துகொண்டிருக்கும் போரியல் ஆய்வாளர்கள், விடுதலைப் புலிகளின் அத்தனை போராட்ட நடவடிக்கைகளிலும் அவர்கள் எதிரியை உளவியல் அச்சத்தில் வைத்திருப்பதான உளவியல் நடவடிக்கைகளை மிக நுனுக்கமாகப் பிரயோகித்து வந்ததாகச் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.
புலிகள் தமது நாக்குதலுக்கு சூட்டும் பெயர்கள் முதற்கொண்டு, அவர்களது தொலைத்தாடர்பு கலந்துரையாடல்கள், குறியீடுகள், தாக்குதல் வியூகங்கள் என்று.. கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகள் மேற்கெண்ட உளவியல் யுத்தங்களே, யுத்தங்களின் பொழுது அவர்களது எதிரியை தடுமாற வைத்த ஒரு முக்கிய அம்சமாக போரியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
இந்த இடத்தில் உங்களில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம்.
விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இத்தகைய உளவியல் நடவடிக்கைகளையும் மீறி, சிறிலங்காப் படைகளால் எப்படி விடுதலைப் புலிகளை முறியடிக்க முடிந்தது?
;.
இந்தக் கேள்விக்கான பதிலை நிச்சயம் நாம் ஆராய்ந்துதான் ஆகவேண்டும்.
அதற்கு முன்பதாக, 2ம், 3ம், 4ம் ஈழ யுத்த காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மேலும் சில முக்கிய உளவியல் நடவடிக்கைகள் பற்றி ஓரளவு சுருக்கமாகப் பார்ப்பது அவசியம் என்று நினைக்கின்றேன்.
தொடரும்..