இன அழிப்பு என்றால் என்ன? உண்மையின் தரிசனம் ( பாகம்-6) -நிராஜ் டேவிட்.
போராடும் ஒரு இனத்தை பட்டினிபோட்டு அடிப்பணியவைக்கமுடியும் என்று உலகிற்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு இன அழிப்புச் சம்பவம் இது.
தனது கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய ஒரு இனத்தை பட்டினிபோட்டுக் கொலைசெய்து தனது கோபத்தைத் தீர்த ஒரு தலைவனின் வரலாறு இது.
சோசலிசம், சமதர்மம் என்ற சொல்லாடல்களின் சத்தத்தின் நடுவே உலகத்தின் செவிகளுக்குள் ஒலிக்கத் தவறிய ஒரு இனத்தின் அழுகுரல்கள் இவை.
79 இலட்சம் உக்ரேனிய மக்களைப் பட்டினிபோட்டுச் சாகடித்த சோவியத் ரஷ்யாவின் இன அழிப்பு நடவடிக்கை பற்றிய ஒரு முழுமையான பார்வையைச் செலுத்துகின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.