சிறையில் புலிகள்?

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-4) – நிராஜ் டேவிட்


இந்திய விமானப் படை கெலிக்காப்டரில் 24.07.1987 அன்று புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா| ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.
‘தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்| என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்| என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்| பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை| பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியோகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ஷஅஷோக்கா ஹோட்டல்| சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது. இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்.
இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடமுடியும்.
இந்தியாவின் நம்பிக்கைத் துரோகம்;
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், எந்த ஈழத் தமிழனும் மன்னிக்கவோ, மறக்கவோமாட்டான் என்பதை காலம் அவர்களுக்கு உனர்த்தியது.

24ம் திகதி முதல் ‘அஷோகா| ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.


இந்த நான்கு நாட்கள் இடைவெளியை, அவர் மற்றய இயக்கங்களைச் சமாளிப்பதற்கும், ஒப்பந்தத்திற்கான அவற்றின் ஒப்புதல்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார். புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ஷஷபுலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்|| என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.

சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களை பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.
புதுடில்லியிலுள்ள ‘அஷோக்கா ஹோட்டலில்| புலிகளின் தலைவர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றி சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமே உடனே எதுவும் வெளியே தெரிவிக்கவில்லை. வௌ;வேறு மனநிலையில் இருந்த இந்த இரண்டு தரப்பினரும் தங்களுக்கிடையில் நடைபெற்ற அந்த சம்பாஷனைகளின் விபரங்களை வெளியிட விரும்பவும் இல்லை. ஆனால், அன்றைய தினம் ‘அஷோக்கா ஹோட்டலில்| நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகள் படிப்படியாக இந்திய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா எப்படியான அழுத்தங்களையெல்லாம் பிரயோகித்திருந்தது என்ற விபரங்கள் வெளியாகி, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் துரோகத்தை இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, முழு உலகிற்குமே வெளிப்படுத்தியிருந்தது.

ஜூலை மாதம் 28ம் திகதி இரவு ‘அஷோக்கா ஹோட்டலில்| புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களையும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார். தமிழ் நாடு அமைச்சர் பண்டிருட்டி ராமச்சந்திரன் மற்றும், இந்திய மத்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் போன்றோரும் இந்தியப் பிரதமருடன் அங்கு சென்றிருந்தார்கள்.

“சிங்கள அரசுகளை நம்பி பல தடவைகள் நாம் ஏமாந்துவிட்டோம். தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது|| என்று பிரபாகரன் ராஜீவ் காந்தியிடம் உறுதியாகத் தொரிதித்திருந்தார்.
“ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஸ்ரீலங்கா அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்துகொள்ளாமல் இந்தியா பார்த்துக்கொள்ளும்|| என்று கூறி பிரபாகரனின் மனதை மாற்றுவதற்கு ராஜீவ் காந்தி முயன்றார்.
ஆனாலும் பிரபாகரன் தனது பிடியை விட்டுக்கொடுக்க தயாரில்லாதவராகவே நிலைப்பாடு எடுத்தார். ராஜீவ் காந்தயின் எந்தவொரு நெருக்குதலுக்கும் மசியாதவராகவே பிரபாகரன் காணப்பட்டார். இதனால் மிகவும் கோபமடைந்த ராஜீவ்காந்தி, “உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது|| என்று மிரட்டியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தியப்பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களைச் சந்திக்கும் முன்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீட்ஷித் அவர்கள் பிரபாகரனைச் சந்தித்திருந்தர். புதுடில்லி ‘அஷோக்கா ஹோட்டலில்| கறுப்புப் புனைகளின் பாதுகாப்பில் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவரைச் சந்தித்த தீட்ஷித், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விபரங்களை விளக்கி, புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார்.

கவணமாகச் செவிமடுத்த புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள், ஒப்பந்தத்தில் உள்ள பல விடயங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, புலிகளின் ஆயுத ஒப்படைப்பு, மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு சம்பந்தமாக சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓரேயடியாக மறுத்திருந்தார். ‘இது மிகவும் குழப்பம் அளிக்கும் ஒப்பந்தம்||, “எமக்கு ஏமாற்றத்தைத் தரும்படியான ஒப்பந்தம்|| என்று அவர் தெரிவித்தார்.

இதனால் மிகவும் கோபமுற்ற தீட்ஷித், “நீங்கள் நான்கு தடவைகள் எங்களை முட்டாளாக்கி ஏமாற்றியுள்ளீர்கள்|| என்று தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த புலிகளின் தலைவர், “அப்படியானால், நான்கு தடவைகள் நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்றி இருக்கின்றோம் என்று அர்த்தம்|| என்று தெரிவித்தார்.|
வைக்கோவின் கவலை


இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள்| என்று அழைக்கப்பட்டவரும், தற்போதய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி ‘பொடா| சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபால்சாமி(வைக்கோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.
அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபால்சாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபால்சாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்,
“அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: ஷநாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் ‘சயநைட்| கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை||. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாலில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.

இந்தியத் தலைவருக்கு எதிரான ‘துன்பியல் சம்பவம்| இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்