மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-17)- நிராஜ் டேவிட்
வீரமும், ஓர்மமும் விளையாடிய இடம்தான் நோமன்டி தரையிறக்கம்.
operation Neptune, Operation Overlord என்ற பெயர்களில் நடைபெற்ற நேசநாடுகளின் நோமன்டித் தரையிறக்கமானது, ஐரோப்பாவை மீட்கும் முதலாவது நடவடிக்கை என்கின்ற வகையில் இரண்டாம் உலக யுத்தத்தில் மிகவும் முக்கியமான ஒரு படைநடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பியக் கண்டத்தில், சோவியத்துடனான களமுனைகளில் ஒன்றுகுவிந்திருந்த ஜேர்மனியின் கவனத்தை சிதறடித்து, இரண்டாவது களமுனையைத் திறந்துவைத்த தரையிறக்கம் என்றும் நோமன்டித் தரையிறக்கம் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் இந்த நோமன்டிப் படை நடவடிக்கை வரலாற்றில் பதிவாகி உள்ளது.
அதேபோன்று நாசி ஜேர்மனியின் தோல்விக்கு கட்டியம் கூறிய ஒரு படைநடவடிக்கை என்று போரியல் வரலாற்றில் பதிவாகிவிட்டுள்ள நோமன்டித் தரையிறக்கம் பற்றிய காட்சிகளை விபரிக்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி