மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-16)- நிராஜ் டேவிட்
அமெரிக்காவை பசுப்பிக் பிராந்தியத்தின் பக்கமே தலை வைத்துப் படுக்க முடியாத அளவிக்கு பலமானதான ஒரு பதிலடி கொடுக்கவேண்டும் என்று நினைத்தது ஜப்பான். அமெரிக்காவின் பேள் துறைமுகத்தைத் திடீரென்று தாக்கி, அமெரிக்காவுக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியது போலவே, அமெரிக்காவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் வழங்கவேண்டும்,…. அந்த அதிர்ச்சி வைத்தியமோ அமெரிக்காவுக்கு மீழ முடியாத இழப்பாகவும் இருக்கவேண்டும். திட்டமிட்ட ஜப்பான், தனது தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்த இடத்தின் பெயர் – மிட்வே.(Midway) உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய கடல் சண்டைகள் என்றும், இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவை எழுதிய சண்டைகள் என்றும் குறிப்பிடப்படுகின்ற Midway கடற் சண்டைகள் பற்றி பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி