2ம் உலக யுத்தத்தில் சோவியத் இராணுவத்தின் போர் தந்திரோபாயங்கள்

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-11)- நிராஜ் டேவிட்

ஹிட்லர் நினைத்து போன்று சோவியத்தின் களமுனைகள் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.                        ஒரு வித்தியாசமான களமுனையை ஜேர்மனியர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.                                              நாசிப் படையினர் முதலில் ஆச்சரியம் அடைந்தார்கள்.
பிறகு அதிர்ந்து போனார்கள்.
சிறு சிறு எதிர்ப்பு அலைகளைத்தான் சோவியத்தில் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஜேர்மன் படைகளின் பிரமாண்டத்தைப் பார்த்து சோவியத் வீரர்கள் அதிர்ந்து பின்வாங்கிவிடுவார்கள் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள்.
ஆனால் சோவியத்தில், அவர்கள் எதிர்பார்த்துவந்த அலைகளுக்கு மாறாக ஆற்பரிக்கும் கடலைத்தான் அவர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

சோவியத்திற்கு திடீரென்று எங்கிருந்து இத்தனை பலம் வந்துசேர்ந்தது?
இத்தனை ஆயிரம் படைவீரர்கள் எங்கிருந்து வந்து முளைத்தார்கள்?
இத்தனை நவீன ஆயுதங்களை அவர்கள் எங்கே வைத்துத் தயாரித்தார்கள்?
எங்கிருந்து கற்றார்கள் இந்தப் போர் யுத்திகளை?
எங்கிருந்து பெற்றிருந்தார்கள் இ;ப்படியான ஒரு அசுர சக்தியை? ஆடிப்போய்விட்டார்கள் ஜேர்மனியின் நாசிப் படையினர்.

சோவியத்தில் நாசிகளின் வீழ்ச்சி ஆரம்பமானது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கான முடிவும் கூட, சோவியத் மண்ணில்தான் எழுதப்பட்டது.
சோவியத் படைகளின் போர் தந்திரோபாயங்கள் பற்றிய காட்சிகள் அடங்கிய உண்மையின் தரிசனம் இது:

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்