உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-17) – நிராஜ் டேவிட்

0

உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற தலைப்பில், வதந்திகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற உளவியல் நடவடிக்கை பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். இந்தியப் படை காலத்தில் வதந்திகளை அவர்கள் தமது உளவியல் நடவடிக்கைக்கான மிகப் பெரிய ஆயுதமாகப் பாவித்திருந்ததாக, இந்தியப் படையைத் தலைமைதாங்கிய பல உயர் இராணுவ அதிகாரிகள் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்: திலீபனின் உண்ணா நோன்பு காலத்திலும், அதனைத் தொடர்ந்து திலீபனின் மரணம் நிகழ்ந்த காலகட்டத்திலும் இந்தியப் படைத்தரப்பு திலீபனின் தியாகத்தின் வலிமையைக் குறைக்கும் நோக்கத்துடன் பலவிதமான வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தது யாவரும் அறிந்தது.
அதேபோன்று நித்தியகுள முற்றுகையின் பொழுது ஏற்பட்ட பின்னடைவை மறைப்பதற்கும் இந்தியப் படைத்தரப்பு வதந்திகளைத் தாராளமாகக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். (இது பற்றிக் கடந்த வாரம் பார்த்திருந்தோம்)

வதந்திகள் என்பது ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும், கால ஓட்டத்தில் அது மிகப் பெரிய காரியங்களைச் செய்துவிடும். தாம் தாக்கும் எதிரிகள் மீது வதந்திகளைப் பரப்புவதென்பது அனேகமாக அனைத்து இராணுவஙகளுமே கையாளும் ஒரு உளவியல் ஆயுதம். ஈராக் மீதான யுத்தத்தின் பொழுதும் சரி, அப்கானிஸ்தான் மீதான யுத்தத்தின் பொழுதும் சரி, வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடுவதென்பது அனைத்து இராணுவத்தினருக்குமே ஒரு மிகப் பெரிய உளவியல் ஆயுதம்தான். அது வல்லரசான அமெரிக்காவாக இருந்தாலும் சரி. அல்லது சிறிலங்கா போன்ற ஒரு சிறிய நாடாக இருந்தாலும் சரி.


அடுத்ததாக, இந்த வதந்திகளைப் பரப்பும் விடயத்தில் பலவிதமான வகைகள் இருக்கின்றன. வதந்தியின் தோற்றுவாய் எது என்று தெரியாமல் மக்கள் மத்தியில் பரப்பப்படும் வதந்திகள், ஊடகங்கள் ஊடாகப் பரப்பப்படும் வதந்திகள், அனாமோதேய கடிதந்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாகப் பரப்பப்படும் வதந்திகள், அல்லது குரல்தரவல்ல ஒருவரால் பரப்பப்படும் வதநற்திகள்.. என்று பல வகையான வதந்திகள் உள்ளன.
இந்தியப் படை ஆக்கிரமிப்புக் காலத்தில் இந்திய உளவுப்பிரிவான றோ ஒரு முக்கியமான வதந்தியை தமிழ் மக்கள் மத்தியில் பரப்ப விரும்பியது. அந்த வதந்தியை மேலே குறிப்பிட்ட அனைத்து வகைகளினூhகவும் பரப்ப அது திட்டம் தீட்டியது.
பல்வேறு இடங்களிலும் தொடர்புகள் அற்ற நிலையில் ஆங்காங்கு மறைந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் உளவியலைக் குறிவைத்தும், ஈழம் மற்றும் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ் மக்களின் உளவிலைக் குறிவைத்தும் வதந்தி ஊடான அந்த உளவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் உளவியல் நடவடிக்கை பற்றி இந்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

1989ம் ஆண்டு ஜூலை 13 இல் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளே அந்தக் கொலைகளைச் செய்தும் இருந்தார்கள்.
அந்த படுகொலைகள் தமிழ் மக்களின் ஒரு தொகுதியினர் மத்தியிலும், தமிழ் நாட்டில் இருந்த ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மத்தியிலும் அப்பொழுது பலத்த வாதிப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தன.

இப்படி அமளிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ஈ.பி.ஆர்.எல். இயக்கத்தினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இந்திய ஆய்வுப் பகுப்பாய்வுப் பிரிவான றோ அந்தச் செய்தியை அவர்களுக்கு தெரிவித்திருந்தது.

அமிர்தலிங்கம் கொலை தொடர்பான விடயத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், பிரதித் தலைவர் மாத்தையாவுக்கும் இடையில் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மாத்தையா புலிகளின் தலைவர் பிரபாகரனை கொண்டுவிட்டு விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும்| அந்த தகவல் தெரிவித்தன.
அப்பொழுது புலிகள் அமைப்பின் புலனாய்வு நடவடிக்கைகள் நேரடியாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் கீழேயே இருந்ததால், அமிர்தலிங்கம் மீதான நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் மாத்தையாவுக்குத் தெரியவில்லை. தெரிவிக்கப்படவுமில்லை. அதனால் பிரபாகரனுடன் அவர் பிரச்சினைப்பட்டு, அந்தப் பிரச்சினை முற்றி, கடைசியில் மாத்தையா புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களையும் மாத்தையா கைதுசெய்து வைத்திருப்பதாகவும், சிலரைச் சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் மேலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
தனது வாயாலேயே முதன் முதலில் இந்தச் செய்தியை ஊடகங்களுக்;குத் தெரிவிக்க ஆசைப்பட்டார் வரதராஜப்பெருமாள்.
பத்திரிiகாயாளர்களுக்கு அழைப்புக்கள் பறந்தன. வடக்கு கிழக்கு பத்திரிகையாளர்களுடன் வரதராஜப் பெருமாளுக்கு அப்பொழு நல்ல உறவு இருந்தது. அவர்களிடம் மகிழ்ச்சியுடன் செய்தியைத் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் அப்பொழுதிருந்த ஊடகவியலாளர்களில் அனேகமானவர்கள் தமிழ் தேசியப் பற்றுமிக்கவர்கள். உயிர் மீதுள்ள அச்சம் காரணமாகவும், நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் நெருக்கத்தைப் பேணவேண்டி இருந்தது. புலிகளின் தலைவர் கொல்லப்பட்டவிட்டார் என்கின்ற செய்தி கிடைத்ததும் அவர்கள் உள்ளத்தால் அதிர்ந்து போனார்கள். அவர்களால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில் வரதராஜப் பெருமாளில் குரலில் தெரிந்த உறுதி அப்படி இருந்தது.
சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அக்காலத்தில் ஈ.என்.டீ.எல்.எப். அமைப்பினர் ஒருவித பிரச்சார யுக்தியைக் கையாண்டு வந்தார்கள். புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகள், புலிகளின் தோல்விகள், மாகான சபை நடவடிக்கைகள் என்பனவற்றை ஈ.என்.டி.எல்.எப். இனர் தினமும் தமது அலுவலகங்களின் முன்பு உள்ள பலகை ஒன்றில் எழுதிவைப்பார்கள். பல சுவாரசியமான சம்பவங்களை அவர்கள் எழுதிவைப்பார்கள். அவ்வழியால் செல்லும் பொதுமக்கள் அவற்றை வாசித்துச் செல்வது வழக்கம். புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பினர் வெளியிட்ட செய்;தியையும், தமக்கே உரிய பாணியில் அவர்கள் தமது அறிவித்தல் பலகையில் வெளியிட்டார்கள். அந்தக்;கதைக்கு கை, கால், மூக்கு அனைத்தும் வைத்து அவர்கள் எழுதியிருந்தார்கள்.

திட்டமிட்டுப் பரப்பபட்ட இந்த வதந்தி, இந்தியப் பத்திரிகைகளுக்கும் பலத்த தீனியாகவே இருந்தது. இந்தியப் பத்திரிகைகளின் தலைப்புக்களிலும் இந்தச் செய்தி முதலிடத்தைப் பிடித்திருந்தது. இந்தியா வானொலியான ஆக்காஷவாணி மணிக்கொருதடவை இந்தச் செய்தியை ஒலிபரப்பியது.

ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களின் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது. புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட செய்தி தமக்கே முதன் முதலில் கிடைத்தது என்கின்ற திமிர் அவர்களுக்கு. ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து மகிழ்சியைப் பறிமாறிக்கொண்டிருந்தார்கள். சில இயக்க அலுவலகங்களிலும், மாகாணசபை அலுவலகங்களிலும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினார்கள். புலிகள் அமைப்புக்குள் என்ன நடந்து, எப்படி புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார், மாத்தையா தற்பொழுது என்ன செய்கின்றார் என்றெல்லாம் தம்பாட்டிற்கு கற்பனை செய்துகொண்டு தமக்கு நெருங்கியவர்களிடம் அளக்க ஆரம்பித்தார்கள். மாத்தையா ஈ.பி.ஆர்.எல்.எப். இனரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள தூது அனுப்பியுள்ளதாகவும் கூட கதை விட்டார்கள்.

வரதராஜப்பெருமாள் ஆர்வக் கோளாரால் ஊடகங்களிடம் கதை விட்டார் என்று தெரிவித்திருந்தேன் அல்லவா? அவர் விட்ட கதைகளில் சிலற்றை தற்பொழுது ஞாபகப்படுத்தினால் ஆச்சரியம் ஏற்படும். சிரிப்பும் ஏற்படும். அத்தனை புழுகுகளை அவர் அப்பொழுது புழுகியிருந்தார்.
ஊடகவியலாளாகளிடம் பேசிய வரதராஜப் பெருமாள், ஷஷபிரபாகரனின் உடல் இறுதி அஞ்சலிக்காக தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது. அவரது நெற்றியில் திலகமிடப்பட்ட நிலையில் பூதஉடல் காணப்படுகின்றது..|| என்று கூறினார்.
பின்னர் சிறிது நேரத்தில் ஊடகங்களைத் தொடர்பு கொண்ட அவர், ஷஷஅஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிரபாகரனின் உடலை மாத்தையா குமுவினர் எடுத்துச் சென்றுவிட்டனர். மக்கள் அஞ்சலி செலுத்தினால் பிரபாகரன்மேல் அனுதாபம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்தே மாத்தையா ஆதரவாளர்கள் பிரபாகரனின் உடலை எடுத்துச்சென்றுவிட்டனர்..|| என்ற கூறினார்.

மறுநாள் ஊடகங்களைத் தொடர்புகொண்ட வரதராஜப்பெருமாள், “பிரபாகரனுடன் கிட்டுவும் கொல்லப்பட்டவிட்டதாக எங்களுக்கத் தகவல்கள் வந்திருக்கின்றன. கிட்டுவின் உடலை உடனே எரித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது..|| என்று அறிவித்திருந்தார்.

வரதராஜப் பெருமாள் இரண்டு விதமான வதந்திகளைப் பரப்பியிருந்தார். ஒன்று அவரை அறியாமல், அவர் ஒரு வதந்தியைப் பரப்பியிருந்தார். அதாவது புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஆரம்பத்தில் அவர் பரப்பிய வதந்தி உளவியல் நடவடிக்கை நோக்கில் றோவினால் உருவாக்கப்பட்டது. அது வரதராஜப் பெருமாள் தான் அறியாமல் பரப்பிய வதந்தி.
ஆனால், தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக பின்னர் அவர் பரப்பிய வதந்திகள் அனைத்தமே அவர் வேண்டும் என்று பரப்பிய வதந்திகள். புலிகளைக் கேவலப் படுத்தவதற்காகவும், தான் முன்னர் பரப்பிய வதந்தியை நியாயப்படுத்துவதற்காகவும் அவர் மேலும் மேலம் கட்டுக்கதைகளை பரப்ப ஆரம்பித்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பரப்பிய வதந்திகள் எல்லை மீறிச் செல்வதாக அவரது சகாக்கள் அவரிடம் தெரிவித்தபோது, தான் புலிகளுக்கு எதிரான ஒரு உளவியல் போரை மேற்கொண்டு வருவதாகக் கூறிச் சமாளிக்க முற்பட்டார்.

புலிகளின் தலைவர் இறந்ததாகப் பரப்பபட்ட வதந்தியை படிப்படியாக பொதுமக்கள் நம்ப ஆரம்பித்திருந்தார்கள். அவ்வாறு நம்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஊடகப் பிரச்சாரமும், தமிழ் இயக்க உறுப்பினர்கள் மேற்கொண்ட பிரச்சாரமும், அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. மக்கள் மத்தியில் பலத்த சோர்வு. கவலை.
தமிழ் தேசியப்பற்றாளர்கள் விரக்தி நிலையை எய்தியிருந்தார்கள். அனைத்தும் முடிந்துவிட்டது என்கின்ற சோர்வு நிலையை அடைந்தார்கள். மக்கள் மத்தியில் பல வாதிப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. ஆனால் மொத்தத்தில் மக்கள் அனைத்தையும் இழந்துவிட்டது போன்ற கவலை நிலையில் இருந்துதான் உண்மை.

எதிரியின் ஆதரவுத் தளம் மீது இப்படியான ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்துவதுதான, ஒரு உளவியல் நடவடிக்கையின் முக்கியமான குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைவதில் இந்திய உளவுத்துறை ஓரளவு வெற்றி மெற்றது என்றே கூறவேண்டும்.
ஆனாலும் குறிப்பிட்ட இந்த வதந்தி விவகாரம் இந்திய உளவுப் பிரிவினரிடையேயும், அந்த வதந்தியைப் பரப்பிய தமிழ் குழுக்கிடையேயும் மற்றொரு தர்மசங்கடம் உருவாகவும் வழியேற்படுத்தியிருந்தது.
சுவாரசியமான அந்தச் சம்பவம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்